“அன்னைக்கு என்னை காலி செய்ய நடந்த சதி”… 6 டூப்ளிகேட் ஓபிஎஸ்-களால் பறிபோன வெற்றி.. உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!

By Soundarya on தை 29, 2026

Spread the love

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜனவரி 29, 2026) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தான் சந்தித்த சவால்கள் குறித்துப் பரபரப்புத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட தன்னை வீழ்த்துவதற்காக, தனது பெயரிலேயே (ஓ.பன்னீர்செல்வம்) மேலும் ஐந்து பேரைச் சுயேட்சையாகக் களமிறக்கி திட்டமிட்டுச் சதி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, தனது வெற்றியைத் தடுக்க எதிர்தரப்பு முயன்றதாக அவர் குறிப்பிட்டார்

அதிமுக-வை மீட்டெடுக்கவும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒன்றிணைக்கவும் தான் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதிபடக் கூறினார். தமிழக அரசியலில் அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.