தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகின்றார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியல்களில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர் தான் ஜெயலலிதா. கடுமையான சவால்களுக்கு மத்தியில் அரசியலில் அவர் வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள்ளேயே பிரம்மிக்கத்தக்க எழுச்சியை பெற்று அசைக்க முடியாத ஒரு பெண் தலைவரானார். இதனிடையே ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரைப் போற்றி பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஜெயலலிதாவை நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவை நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய ஓபிஎஸ், செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை என்றும் தடாளடியாக கூறியுள்ளார். முன்னதாக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி தனிக்கட்சி குறித்து அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று அறிவித்துள்ளதால் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…