ஓபிஎஸ்-க்கு செம ஷாக்… மொத்தமாக தட்டி தூக்கிய இபிஎஸ்… மீண்டும் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்…!

By Nanthini on ஐப்பசி 2, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதரிடையே அதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருந்தாலும் அதற்கு எல்லாம் செவிசாய்க்காமல் வெற்றி பயணத்தை நோக்கி இபிஎஸ் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

அதேசமயம் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச் செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அதேபோல ஓபிஎஸ் அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணைச்செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக மற்றும் காங்கிரஸ், அமமுக கட்சியை சேர்ந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.