செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக ஒண்றிணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
