BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணையும் OPS?…. பயங்கர ஷாக்கில் இபிஎஸ்….!

By Nanthini on மார்கழி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கட்சியில் இணைய மாட்டோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனிடையே டெல்லிக்கு ஓபிஎஸ் சென்றுள்ள நிலையில் அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக ஓபிஎஸ் டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து ஜேபி நட்டாவை சந்தித்து பேச உள்ளாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால் இபிஎஸ் எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.