EPS எப்படி முதல்வரானார் தெரியுமா..? நான் ஏமாந்து போயிட்டேன்… ஓபிஎஸ் போட்ட பகீர் குண்டு..!!

By Soundarya on பங்குனி 17, 2026

Spread the love

கோவில்பட்டியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணியின் பலத்தையும் அரசியல் பண்பாட்டையும் வெகுவாகப் பாராட்டினார். திமுக கூட்டணியில் இருந்து யாரும் இதுவரை வெளியேறவில்லை என்றும், அது ஒரு நிரந்தரக் கூட்டணியாகத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்தபோது ராஜ்யசபா சீட்டு தருவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியதைச் சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தற்போது திமுக கூட்டணியில் இணைந்தவுடன் ஒப்பந்தம் இல்லாமலேயே தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கப்பட்டிருப்பதுதான் உண்மையான அரசியல் பண்பாடு என்று புகழாரம் சூட்டினார்.

தனக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கடுமையாகச் சாடிய ஓபிஎஸ், அவர் பெயரைச் சொல்லவே தனக்கு வெட்கமாக இருப்பதாகத் தெரிவித்தார். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் என்றும், ஆனால் தானும் எடப்பாடி பழனிசாமியும் இடையில் நியமிக்கப்பட்ட ‘அப்பாயின்மென்ட்’ முதலமைச்சர்கள் தான் என்பதையும் வெளிப்படையாகப் பதிவு செய்தார்.