அதிமுகவின் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ் வருகின்ற சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஐ பாஜக மேலிடம் கண்டு கொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது என்ற திட்டவட்டமாக கூறிவிட்டார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் முயற்சி செய்தோம் அவரை பார்ப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டிய நிலையில் அவரை தொடர்ந்து இரண்டு முறை சந்தித்து பேசினார். இதனால் திமுகவில் இணைய போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் விஜய் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த ஓபிஎஸ் நேற்று திடீர் பயணமாக டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்தார். அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார்.
இதனிடையே இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவருடைய நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய ஓபிஎஸ் தனி கட்சி தொடங்குவதாக தான் கூறவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஏறத்தாழ ஓபிஎஸ் தனி கட்சி தொடங்குவார் என்ற தகவல் உண்மையில்லை என்ற உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் இடம் மூன்று திட்டங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்றை நிறைவேற்ற தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது புதிய கட்சி தொடங்கி பாஜக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அடுத்ததாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர்ந்து விஜயுடன் கைகோர்க்கலாம், அதிமுகவுடன் மீண்டும் சேரலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளை அழைத்த ஓபிஎஸ் தரப்பினர் கூட்டணி குறித்து பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…