தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்த என்டிடிவி – சி வோட்டர் (NDTV – C Voter) கணிப்புகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கணிப்பின்படி, தவெக 12% வாக்குகளைப் பெற்று, அதில் 8% வாக்குகளை திமுகவின் வாக்கு வங்கியிலிருந்து பிரித்தால் மட்டுமே எதிர்க்கட்சியான அதிமுகவுக்குச் சாதகமான சூழல் உருவாகும். இத்தகைய சூழலில் மட்டுமே ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளதாகவும், திமுகவின் வாக்குகள் சிதறுவது அதிமுகவின் வெற்றிக்கு நேரடி வழியாக அமையும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், தவெக மற்ற சதவீதங்களில் வாக்குகளைப் பிரிப்பது திமுகவிற்கே சாதகமாக முடியும் என அக்கணிப்பு தெரிவிக்கிறது. உதாரணமாக, தவெக 8%, 10% அல்லது 14% என வாக்குகளைப் பெற்றாலும், அவை பெரும்பாலும் அதிமுக அல்லது மற்ற கட்சிகளின் வாக்குகளாக இருக்கும் பட்சத்தில், திமுகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் பாதிக்கப்படாது. இதனால் சிதறும் வாக்குகள் திமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்காமல், மீண்டும் அக்கட்சியே ஆட்சியமைக்க வழிவகுக்கும் என சி வோட்டர் கணிப்பு விவரிக்கிறது. விஜய்யின் வருகை யாரை அதிகம் பாதிக்கும் என்பதே 2026 தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் எனத் தெரிகிறது.
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…