பணம் செலவழித்தால் தான் வாழ்க்கையா…? டெல்லியை விட மும்பையை மிஸ் பண்றேன்…. பிரபல இன்ப்ளூயன்சர் கருத்து… இணையத்தில் வெடித்த காரசார விவாதம்…!!

By Devi Ramu on புரட்டாதி 20, 2026

Spread the love

மும்பையில் 5 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு தற்போது குர்கானிற்கு குடிபெயர்ந்துள்ள பிரபல சமூக வலைதள இன்ப்ளூயன்சர் வைசாக்கா கெளசிக் தான் ஏன் மீண்டும் மும்பைக்கே செல்ல விரும்புகிறேன் என்பது குறித்துப் பேசியுள்ளார்.

டெல்லி, குர்கான் மற்றும் நொய்டா போன்ற டெல்லி-NCR பகுதிகளில் நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டுமெனில் எப்போதும் உணவகங்கள், கஃபேக்கள், பார்ட்டிகள் மற்றும் ஷாப்பிங் போன்ற பணம் செலவழிக்கும் இடங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மும்பையில் மெரைன் டிரைவ், கார்ட்டர் ரோடு போன்ற கடலோரப் பகுதிகளில் கட்டணமின்றி அமைதியாக நண்பர்களுடன் அமர்ந்து பேச முடியும் என்றும், அங்குள்ள எளிய வாழ்க்கை முறையைத் தான் மிகவும் மிஸ் செய்வதாகவும் கூறியுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DdN-xwIzoG5/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

மேலும், மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நகரம் முழுவதும் ஒலிக்கும் மேள தாளங்கள், பந்தல்கள் மற்றும் திருவிழா சூழல் மிகவும் அற்புதமாக இருக்கும் என்றும், தற்போது அதை நேரில் பார்க்க முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மும்பை மற்றும் டெல்லி நகரவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.