“இனி ரிஜிஸ்டர் ஆபீஸ் போகவே வேண்டாம்… பத்திரப்பதிவில் மிகப்பெரிய அதிரடி”…. பட்ஜெட்டில் வரப்போகும் தமிழக அரசின் புதிய மாற்றம்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை அரசு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக, வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய பத்திரப்பதிவு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்குவது, நிலங்களின் வழிகாட்டி மதிப்பை சீரமைப்பது மற்றும் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு அலைவதைக் குறைத்து டிஜிட்டல் முறையில் ஆன்லைனிலேயே பத்திரப்பதிவை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் பத்திரப்பதிவு மற்றும் வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.