பெற்றோர்களே உஷார்… உங்க குழந்தைகளின் உயிருக்கு எமனாக மாறும் ஆன்லைன் கேம்… புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

பொதுவாகவே குழந்தைகள் மனதளவில் தனிமையில் இருந்தால் அவர்கள் மன நிம்மதிக்காக ஆன்லைன் கேம் விளையாடுகின்றன. பின் நாட்களில் இதற்கு அடிமையாகி அவர்களுடைய உடல் நிலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள குழந்தைகளின் ஆன்லைன் தாஸ் அடிப்படையிலான கேம்களை விரும்பி விளையாடுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ப்ளூவேல் எனப்படும் டாஸ்க் அடிப்படையிலான கேம் பேசுபொருளான நிலையில் டாஸ்கை முடித்த பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்தனர்.

இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் உலக அளவில் அந்த கேமுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் இது போன்ற கேம்களை இளம் தலைமுறையினர் முழு நேரமாக விளையாடுகிறார்கள். கேமில் ஒவ்வொரு லெவலுக்காக தங்களுடைய நேரத்தை செலவிட்டு தினம் தோறும் அதனை தவறாது விளையாடி வருவதால் உயிருக்கு ஆபத்தான நிலையை எதிர்கொள்கிறார்கள். இந்த வகை கேம்களை அதிகளவில் தனிமையில் இருக்கும் சிறார்கள் விரும்பி விளையாடுகிறார்கள்.

   

இவர்கள் விரக்தியில் இருப்பதால் தனிமை உணர்வை போக்க மன அழுத்தத்திலிருந்து விடுபட அதனை தேர்வு செய்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் ப்ளூவேல் கேம் இருந்ததைப் போல தற்போது ரோபிளாக்ஸ் ஆன்லைன் கேம் பாதுகாப்பு குறைபாடுகளுடன் கேமை விளையாடும் நபரிடம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த கேமில் பிளேயர்கள் புதிய கேம்களை உருவாக்கி தகாத காட்சிகளை செய்ய முடியும் என கூறப்படுகிறது. குழந்தைகள் பலரும் இது அபாயத்தை உணராமல் இருக்கும் நிலையில் தனிமையில் இருக்கும் சிறுவர்களுக்கு அதனை விளையாட தொடங்கிய பிறகு விபரீதத்தில் சிக்குவதாகவும் தெரிகிறது. எனவே பெற்றோர்கள் சற்று கவனமுடன் இருப்பது அவசியம்.