இனிமே ரிஜிஸ்டர் ஆபீஸில் அலையவே வேண்டாம்…. தமிழக அரசின் புதிய ‘வருகையில்லா பதிவு’ புரட்சி…. பட்டா, பத்திரப்பதிவில் அதிரடி திருப்பம்…!

Spread the love

தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகளை எளிமையாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட “வருகையில்லா ஆவணப்பதிவு” (Paperless / Non-visiting Document Registration) முறை தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வசதி, இனி அரசு மற்றும் அரசு சார்ந்த முக்கிய நிறுவனங்களுக்கும் கிடைக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே தங்களது பத்திரப்பதிவு பணிகளை விரைவாக முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் (TNHB), தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் (TIIC) ஆகியவை இத்திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் ஆவணங்களை பதிவு செய்யலாம். இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிவுத்துறையிடம் இருந்து சிறப்பு “லாக்-இன்” (Log-in) அனுமதி பெற வேண்டும். இதன் மூலம், நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான புதிய ஆவணங்கள் மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள உரிமையை மற்றவர்களுக்கு மாற்றும் பத்திரங்களையும் தங்களின் அலுவலகத்தில் இருந்தபடியே ஆன்லைனில் தாக்கல் செய்ய முடியும்.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம் பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்புகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட வெறும் 44 நாட்களுக்குள்ளாகவே 1,00,134 ஆவணங்கள் இந்த வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவிடைத்துள்ளது. பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ஆன்லைன் வழியிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளதால், ஆவணப் பதிவிற்காகச் செலவிடப்படும் நேரமும் அலைச்சலும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

அரசு நிறுவனங்களுக்கும் இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தினமும் அதிக எண்ணிக்கையிலான பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் வீட்டுவசதி வாரியம் மற்றும் வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளின் பணிகள் இனி தொய்வின்றி அதிவேகமாக நடக்கும். பொதுமக்களும் இடைத்தரகர்களின் தலையீடோ அல்லது நீண்ட நேரக் காத்திருப்பப்போ இன்றித் தங்களது அரசு சார்ந்த வீட்டுமனை மற்றும் கடன் பத்திரங்களைச் சுலபமாகப் பெற முடியும். இத்தொழில்நுட்பப் புரட்சி தமிழகப் பதிவுத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் பணித் திறனையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Nanthini

Recent Posts

“நட்புனா சும்மாவா?”…. இன்ஸ்டா, வாட்ஸ்அப் மூலம் இந்தியக் கடற்படையை வளைத்த பாகிஸ்தான் பெண் உளவாளிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!

சமூக வலைதளங்களில் தொடங்கும் ஒரு சாதாரண நட்பு, நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் அளவுக்கு ஆபத்தானதாக மாறக்கூடும் என்பதை அண்மைய உளவு…

4 minutes ago

இதை உடனே பாருங்கள்..! இ-ஸ்கூட்டரும் இப்படி ஆகுமா?… லட்சக்கணக்கில் நஷ்டம்… கன்டெய்னருக்குள் கொழுந்துவிட்டு எரிந்த தீ… பதறியடித்து ஓடிய டிரைவர்…!!

இந்த விபத்திற்கான இழப்பீட்டுப் பொறுப்பு லாரி ஓட்டுநரைச் சேராது; வணிக ரீதியான சரக்குப் போக்குவரத்தில் இத்தகைய இழப்புகள் முழுமையாகக் காப்பீடு…

5 minutes ago

நிலநடுக்கத்தால் வந்த சோதனை…. டெல்லியில் இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்…. கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

டெல்லியின் நெரிசல் மிகுந்த குடியிருப்புப் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்ட மறுநாளே ஐந்து மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில்…

11 minutes ago

சென்னையில் அதிர்ச்சி…. டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென உருண்ட சொகுசு கார்…. வைரலாகும் பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சென்னையில் உள்ள முக்கிய மற்றும் பரபரப்பான சாலைகளில் ஒன்றான திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, திடீரென சாலையில் பெரிய பள்ளம்…

18 minutes ago

“ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்”..! டிக்கெட் இல்லாம போலாமா?… கைதியோடு ஏறிய போலீஸ்… இறக்கிவிட்ட RPF… நடுவழியில் நடந்த பகீர் வாக்குவாதம்…!!

கைதி ஒருவரை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த ராஜஸ்தான் மாநிலக் காவலர்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கும் இடையே முறையான பயண…

22 minutes ago

நடுவானில் உறைந்துபோன நிமிடங்கள்…. “நான் சாக விரும்பல” கதறிய பைலட்…. 45 நிமிடம் போராடி உயிர் மீட்ட ஜார்ஜிய டாக்டர்….!

ஃபிளை துபாய் விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட விபத்து அல்லது உடல்நலக்குறைவால் கடுமையாகக் காயமடைந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை,…

24 minutes ago