“மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு… நாடுமுழுவதும் அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி… திடீர் அறிவிப்பு”…!!

By Muthu Mani on வைகாசி 12, 2026

Spread the love

ஐதராபாத் மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மேற்காசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைக் கையாள மக்கள் எரிபொருள் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பு என்றும், ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமிப்பது கூட தேசத்தின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைக்க, தங்கம் வாங்குவதை மக்கள் தற்காலிகமாகத் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக, கடினமான பொருளாதாரச் சூழல் நிலவும் இந்த ஓராண்டு காலத்திற்கு, திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான அதீதச் சார்பைக் குறைத்து, நாட்டின் வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

   

கொரோனா காலத்தைப் போலவே தற்போதைய சவால்களையும் நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட பிரதமர், எரிபொருள் நுகர்வைக் குறைக்க அலுவலகக் கூட்டங்களை இணையவழியில் (Virtual) நடத்தவும், வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை (Work from home) மீண்டும் ஊக்கப்படுத்தவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணங்களைக் குறைப்பதன் மூலம் தேவையற்ற எரிபொருள் செலவைத் தவிர்க்க முடியும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

   

போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்க மெட்ரோ இரயில்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை (EV) மக்கள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், பள்ளிகளில் மீண்டும் இணையவழி (Online) கற்பித்தல் முறையைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இக்கட்டான இக்காலத்தில் தேசத்தின் பொருளாதார விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருக்கவும், அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கவும் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.