பேராசையை தூண்டிய ஆன்லைன் அழைப்பு… நம்பிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. இப்படியுமா நடக்கும்…?

Spread the love

திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன், மனைவி புவனேஸ்வரி (34). இவர் பெங்களூரில் உள்ள, ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வீரமணிகண்டன் வீடு கட்டுவதற்காக, தனது மனைவியின் வங்கி கணக்கில் பணம் சேர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மரம நபர்கள் வாட்ஸ் ஆப் மூலம், புவனேஸ்வரிக்கு போன் செய்து, பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உள்ளதால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம், இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் புவனேஸ்வரியை நம்பவைக்க, டெலிகிராம் குரூப் ஒன்றை ஓப்பன் செய்து, அதன் மூலம் தொடர்ச்சியாக தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.

இதனை நம்பிய புவனேஸ்வரி அவர்கள் கூறியபடியே, பிப்ரவரி 19 முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை பல தவணைகளாக ரூ. 23,14,676 செலுத்தியுள்ளார். அதிகப்படியான பணம் அனுப்பியதால், தனக்கு சேர வேண்டிய பங்கை தருமாறு கேட்டு இருக்கிறார், புவனேஸ்வரி. அதற்கு அந்த மர்ம நபர்கள், நீங்கள் செலுத்திய தொகை 23 லட்சம் இப்பொழுது 50 லட்சம் ஆக உயர்ந்துள்ளது, மொத்த தொகையும் பெற நீங்கள் ஜி.எஸ்.டி தொகையாக ரூபாய் 8 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இந்த செய்தி வந்த ஓரிரு நாட்களில், டெலிகிராம் குரூப் வழியாக தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டனர்.

தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்த புவனேஸ்வரி, திருவாரூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் பெண்ணிடம் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, திருவாரூர் மாவட்ட எஸ்.பி கூறுகையில், “சைபர் கிரைம் குற்றங்கள் தினம் தோறும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். எனினும், இது போன்று பலர் ஏமாறுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, யார் பணம் கேட்டு ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டாலும், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

Srimathi

Recent Posts

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… மாட்டின் உடலில் TVK வர்ணம் பூசிய கொடூரம்… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…

35 seconds ago

“நன்றி, மீண்டும் வராதீர்கள்” காங்கிரஸிற்கு தரமான பதிலடி கொடுத்த திமுக… இணையத்தில் வைரலாகும் பதிவு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, திமுக-விற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான 10 ஆண்டுகால கூட்டணி…

2 minutes ago

விஜய்யுடன் கூட்டணி எங்களுக்கு பிடிக்கல… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்… அடுத்தடுத்து பரபரப்பு..!!

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…

7 minutes ago

“துரோகம் எங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல” ஆனால்… இப்போ அது தெரிஞ்சிடுச்சி… காங்கிரசை கிழித்தெடுத்த டி.ஆர் பாலு..!!

திமுகவின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, காங்கிரசுடன் நிலவி வரும் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி…

10 minutes ago

“நன்றி கெட்ட ஜென்மங்கள்” எங்களுக்கு எந்த கவலையும் இல்லை… காங்கிரஸை சாடிய ஆர்.எஸ். பாரதி..!!

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…

28 minutes ago

சில மணிநேரங்களில் பழுத்த மாம்பழங்கள்.. வெளியே மஞ்சள், உள்ளே விஷம்… வெளியான பகீர் சம்பவம்..!!

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …

30 minutes ago