அய்யய்யோ… 40 டிகிரி வெயிலில் Free Fire கேம் விளையாடிய சில நிமிடங்களில்… பாக்கெட்டில் வைத்த ரூ.17,000 OnePlus மொபைல்… திடீரென வெடித்து சிதறியதால் பெரும் அதிர்ச்சி…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

ஒரு இளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.17,000 விலையில் ‘OnePlus Lite’ மொபைல் ஒன்றை வாங்கியுள்ளார். நேற்று மதியம் 40 டிகிரி கடுமையான வெயிலில், அந்த மொபைலில் ‘Free Fire’ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். விளையாட்டு முடிந்ததும் மொபைலை தனது பாக்கெட்டில் வைத்த சில கணங்களிலேயே, அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், OnePlus நிறுவனத்தின் மீது தனது கடுமையான கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஒருவேளை இந்த மொபைல் போனில் அழைப்பு பேசிக் கொண்டிருக்கும்போது வெடித்திருந்தால், அது மிகப்பெரிய ஆபத்தான விபத்தாக மாறியிருக்கும் என்றும், தனது உயிரே கேள்விக்குறியாகியிருக்கும் என்றும் அவர் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

   

சாதாரண பிராண்டுகளை விட 2,000 முதல் 4,000 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து, ஒரு முன்னணி ‘பிராண்ட்’ நிறுவனம் என்ற நம்பிக்கையில் தான் OnePlus மொபைலை வாங்கியதாக அவர் கூறினார். இவ்வளவு பெரிய நிறுவனம் இத்தகைய அலட்சியமான தரத்துடன் தயாரிப்புகளை வழங்குவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது வாடிக்கையாளர்களின் உயிருடன் விளையாடும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.