அம்பாசமுத்திரத்தில் சீமானின் மெகா ஸ்கெட்ச்…. சிவகார்த்திகேயனை களமிறக்கி அதிமுக-வை வீழ்த்த பிளானா?…. பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

தமிழக அரசியலில் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் களம் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு ‘வீட்டுக்கு ஒரு வாக்கு’ என்ற இலக்கைக் கொண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றார். வரும் நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் நாளன்று அம்பாசமுத்திரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, தேர்தல் களத்தைச் சூடாக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் அதிமுக நடிகர் தனுஷை தங்கள் பக்கமாக இழுக்க காய்களை நகர்த்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக பிரபல நடிகர் சிவகார்த்திகேயனைத் தன் பக்கம் களமிறக்க சீமான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமா மற்றும் அரசியல் சக்திகள் மோதும் இந்த விறுவிறுப்பான சூழலில், சீமானின் ‘சேயோன் படை’ பெறப்போகும் வெற்றி என்பது இறுதியில் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் கைகளில் உள்ள ‘வாக்கு’ எனும் கூர்மையான அம்புகளில் தான் அடங்கியுள்ளது.