ஈரோடு கலெக்டர் கார் மோதி பரிதாப பலி…. RTO அலுவலகம் முன்பு நேர்ந்த அதிர்ச்சி விபத்து… சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையம் பகுதியில், கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துவிட்டு ஸ்கூட்டரில் திரும்பிய சண்முகம் (50) என்பவர் மீது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்சியரின் கார் வருவதைக் கவனிக்காமல் அவர் சாலையைக் கடந்ததே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.