CSR நிதியில் புது ரூட்…. இனி ஊழலுக்கு இடமில்லை…. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டிரோன்…. தமிழக அரசு செய்யப்போகும் மெகா மாற்றம்… அமைச்சர் ஆனந்த் மாஸ் பிளான்….!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் “வெற்றித் தமிழகம்” முதல் மண்டல மாநாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மற்றும் தொலைநோக்கு ஆவணம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) நிதி தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டார். பழைய கால முறைகளை மாற்றி, நிறுவனங்களே முழு நிதியையும் பயன்படுத்தி திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் அந்தப் பணிகளை முறையாக மேற்பார்வையிட்டு எந்தவிதத் தவறும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

   

மேலும், கிராமங்களின் தேவைகளை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டறியும் புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார். அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டிரோன் இயக்கி, கிராமங்களில் உள்ள சாலை வசதிகள் மற்றும் தூர்வார வேண்டிய இடங்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.