அடிக்கக்கூடாத நபரை அடித்த காரணத்தினால் ஒரு நாள் முழுவதும் ஜெயிலில் இருந்ததாக பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியில் பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பாலிவுட்ல மிகப்பெரிய இயக்குனராக வளம் வருபவர் நடிகர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான one to one என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இந்நிலையில் பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகர் அனுராக் காஷ்யப். அந்த நிகழ்ச்சியில் தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியிருந்தார். அதில் ஜெயில் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்திருந்த அவர் “ஆம் நான் ஜெயிலில் இருந்திருக்கின்றேன்.
யாரை அடிக்க கூடாதோ அவர்களை அடித்ததனால் நான் ஜெயிலுக்கு போனேன். ஒரு நாள் இரவு முழுவதும் ஜெயிலில் இருந்தேன். நான் தப்பான ஆள் மீது கைய வச்சுட்டேன். யாரை அடிச்சுட்டு ஜெயிலுக்கு போனேனோ அவர்னால தான் என்னோட வாழ்க்கை மாறுச்சு. அவர்தான் என்னை ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு, நான் இப்ப இப்படி இருக்கேன்னா அதற்கு அவர்தான் காரணம்” என்று கூறியிருந்தார்.
ஆனால் அந்த நபர் யார் என்பதை அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை கூறியவுடன் அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர். தற்போது நடிகர் அனுராக் காஷ்யப் பேட் காப் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகின்றார். இந்த வெப் சீரியஸ் டிஸ்ட்ரி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியிருக்கின்றார்.