தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1 சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறையாகும். பிறகு அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனிடையே அக்டோபர் 3 ஆம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் தமிழக முழுவதும் விடுமுறை அளித்து சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.
