கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளர் காலனியில் வசிப்பவர் மதன். இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையின் தொண்டையில் நிலக்கடலை சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
