மலையாளத் திரை உலகை மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன்லால். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது தந்தை விஸ்வநாதன் நாயர் கேரளா அரசின் முன்னாள் அதிகாரியும் சட்டச் செயலாளர் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு வெளியான ‘தீரனோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து என் மோகங்கள் பூவணிஞ்சு , இனியெங்கும் , விசா , அட்டக்கலாஷம் , கலியில் அல்பம் காரியம் , என் மாமட்டுக்குட்டியம்மாக்கு , எங்கே நீ மறக்கும் , உணர், ஸ்ரீகிருஷ்ணா பருந்து போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்திய சினிமா துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியுள்ளார். 1980 ஆம் வருடம் பாசில் இயக்கத்தில் வெளியான “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதுவரை நானூறுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 1986 ஆம் வருடம் இவர் நடிப்பில் 34 படங்கள் வெளியாகியது. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது . ஒரு நடிகரின் 34 படங்கள் ஒரே ஆண்டில் வெளியானது இதுவே முதல்முறை.
64 வயதாகும் இவர் ஐந்து தேசிய விருதுகளையும் பெற்று மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார் .இது தவிர பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்துள்ளது. அதேபோல மலையாளத்தில் முதல் 200 கோடி வசூல் குவித்தது மோகன்லால் தான். 1919 ஆம் வருடம் வெளியான லூசிபர் படம் மலையாளத்தில் முதல் 200 கோடி வசூல் சாதனை படைத்த படமாக மாறியது.
ஒரே வருடத்தில் வெளியான 34 படங்கள் குறித்து மோகன்லால் கூறும்போது ,”அந்த காலத்தில் படத்தின் சூட்டிங் 10 முதல் 25 நாட்கள் நடக்கும். அதுமல்லாமல் சில படங்களில் சிறப்பு தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதனால் அது சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…