தமிழகத்தில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5000… சற்றுமுன் இபிஎஸ் பரபரப்பு பேட்டி…!

Spread the love

அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திமுகவின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும் கம்பி என்ன போவது உறுதி என்று எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனங்களில் அமைச்சர் கே என் நேரு தன்னுடைய உறவினர்கள் மூலம் 1020 கோடி கொள்ளை அடித்துள்ளது தொடர்பாக பல நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குனரும் தமிழக தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதி அமைச்சர் கே என் நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் 1020 கோடி ஊழலை கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அமைச்சர் கே என் நேரு தன்னுடைய உறவினர்கள் மூலம் டென்டருக்கு 7.5% முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது. இந்த கடிதம் மூலம் வெளிவந்துள்ளது. கழிப்பறை கட்டுவது முதல் நபார்டு வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு 25 சதவீதம் வரை பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்று உள்ளது. திமுகவின் மாடல் ஆட்சி என்பது வெறும் கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் மாடல் தான் என்பதை நான் அடிக்கடி தெரிவித்து வருகிறேன்.

ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சரவை கொள்ளை அடித்த ஊழல் பணத்தை எல்லாம் மீட்டெடுத்தாலே கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தலாம். ஒவ்வொரு வருடமும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்து விடலாம். பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தாராளமாக வழங்கலாம். அவ்வளவு ஏன் தமிழ்நாட்டிற்கு ஒரு வருடத்திற்கு பட்ஜெட்டையே தாக்கல் செய்யலாம்.

இவ்வளவு மக்கள் பணத்தை வாரி சுருட்டிக்கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் தப்பித்துக் கொள்வோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஏற்கனவே நயினார் நாகேந்திரனும் பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி இருந்தார். பொங்கல் பரிசுத்தொகை குறித்து அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

திமுக ஆட்சியில் ரூ.1,020,00,00,000 ஊழல்…. கே.என்.நேரு அடித்த கொள்ளை.. புட்டு புட்டு வைத்த எடப்பாடி..!!

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…

4 minutes ago

திடீர் திருப்பம்… விஜயின் தந்தையை ரகசியமாக சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி… கூட்டணிக்கு அச்சாரமா?… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…

18 minutes ago

விமானத்திற்குள் திடீரென நுழைந்து ஆட்டம் காட்டிய புறா… அலறிய பயணிகள்… வைரலாகும் வீடியோ…!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…

34 minutes ago

2026 தேர்தல்… மாம்பழம் சின்னத்தில்தான் போட்டி… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…

42 minutes ago

உச்சகட்ட கொடூரம்… காதலியை மலை உச்சியில் உறைய வைத்து கொலை செய்த காதலன்?… நம்பிச்சென்ற பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்…!

மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

1 மணி நேரம் ago

தமிழக மக்களுக்கு டபுள் ஜாக்பாட்… 15 லட்சம் பேருக்கு ரூ.1000, பொங்கல் பரிசாக ரூ.5000… திமுக அரசின் பலே திட்டம்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக பல்வேறு புதிய புதிய…

1 மணி நேரம் ago