ஓணம் பண்டிகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுவாக கேரளாவில் மட்டும்தான் ஓணம் கொண்டாடப்படும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் இன்று அனைத்து தரப்பினரும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் புத்தாடை அணிந்து தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
அதேபோல ஒரு பள்ளியில் ஆசிரியைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடி மாணவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளனர். அவர்களின் அற்புதமான நடனம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த அழகான நடன வீடியோ இதோ உங்களுக்காக….