ஓணம் பண்டிகை எதிரொலி….!!! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமான கட்டணம்….அதிர்ச்சியில் பயணிகள்….!!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை மற்றும் அதை சுற்றுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், தங்கள் சொந்த ஊர் இருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

ரயில்களின் முன்பதிவு ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், ஆம்னி பஸ்களின் கட்டணமும் அதிகமாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் விமானங்களில் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து, விமான கட்டணங்களும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

   
  • சென்னை – திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ. 4,359 இல் இருந்து ரூ.19,903 ஆக அதிகரித்துள்ளது
  • சென்னை – கொச்சி விமான கட்டணம் ரூ. 3,713 இல் இருந்து ரூ. 11,798 ஆக உயர்த்துள்ளது.
  • சென்னை – கோழிக்கோடு விமான கட்டணம் ரூ. 3,629 இல் இருந்து ரூ. 10,286 ஆக உயர்ந்துள்ளது.

பயணிகள் விமான கட்டண உயர்வை பொருட்படுத்தாமல், ஓணம் பண்டிகையை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் விமானங்களில் பயணித்து வருகின்றனர்.