கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த ஏழு நாட்களுக்கு மேல் வெளி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு ஆண்மை பேருந்துகள் இயங்காது என்றும் முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
