கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் (21) கோவையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் MSC இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த கல்லூரி மாணவி தன்னுடைய தாயாருடன் கோவைக்கு ஆம்னி பேருந்து ஒன்றில் சென்ற போது அனீஸ் (36) என்பவர் அந்த பேருந்தின் ஓட்டுனராக இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஓட்டுநர் அனீஸ் அந்த கல்லூரி மாணவி மற்றும் அவருடைய தாயாரிடம் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என பேருந்து நிறுத்துமிடங்களில் எல்லாம் உதவிகளை செய்துள்ளார். மேலும் மாணவியின் தாயாரிடம், மாணவி என்னுடைய மகளை போன்றவர் என்றும் கோவையில் கல்லூரிக்கு சென்று வர தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன், நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்று அக்கறையாக பேசியுள்ளார்.
அவருடைய பேச்சை நம்பிய அந்த கல்லூரி மாணவியும் விடுமுறையில் ஊருக்கு வரும்போது எல்லாம் அவர் வந்த பேருந்திலையே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனிஷ் ஒட்டிய ஆம்னி பேருந்தில் கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக மாணவி ஏறியுள்ளார். படுக்கை வசதி கொண்ட அந்த பேருந்தில் மாணவி தூங்கியபடி வந்து கொண்டிருந்தார். அப்போது மாணவியை தட்டி எழுப்பிய அனீஸ், பசித்தால் இந்த பிஸ்கட்டை சாப்பிடு என்று கொடுத்துள்ளார். அதனை வாங்கி சாப்பிட்ட மாணவி சிறிது நேரத்தில் மயக்கமடைந்த நிலையில் மறுநாள் காலை பேருந்து தக்கலை வந்து சேர்ந்ததும் நம் இருவருக்கும் நேற்று இரவே எல்லாம் முடிந்துவிட்டது என்று அனீஸ் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அணிஸ் தனக்கு மயக்க பிஸ்கட் கொடுத்ததும் அதனை சாப்பிட்ட பிறகு மயங்கி இருப்பதும் அவர் தன்னை பலாத்காரம் செய்ததும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் கதறி அழுத மாணவி இது பற்றி நான் என் பெற்றோரிடம் கூறுவேன் என தெரிவித்ததற்கு கத்தியை காட்டி மிரட்டிய அனீஸ் உன்னையும் உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் கொலை செய்து விடுவேன், நேற்று இரவு நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி இது பற்றி யாரிடமும் கூறவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனீஸ் மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என்று இரண்டு நாட்கள் வெளியே அழைத்துச் சென்று அவரை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு கட்டத்தில் மாணவி இது பற்றி தனது தாயிடம் கூறிய நிலையில் உடனே போலீசில் புகார் அளித்தனர். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஓட்டுநரை கைது செய்துள்ளனர்
