அட.. இவர்கள்தான் நடிகை கே ஆர் விஜயாவின் மகள் மற்றும் பேரனா?… முதன் முதலாக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…

அட.. இவர்கள்தான் நடிகை கே ஆர் விஜயாவின் மகள் மற்றும் பேரனா?… முதன் முதலாக இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ…

பழம்பெறும் மூத்த நடிகையான கே ஆர் விஜயாவின் மகள் மற்றும் பேரனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

நடிகை கே ஆர் விஜயா அந்த காலத்தில் ‘புன்னகை அரசி’ என்று பெயர் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் 1963இல் வெளியான கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் 400க்கும்  மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை கேஆர் விஜயா மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் எண்ணற்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவரை இயக்குனர் கே எஸ் பாலகிருஷ்ணன் தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்தார்.

இவரது திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஹேமலதா என்ற ஒரு மகள் உள்ளார்.

இவரது மகள் ஹேமலதாவிற்கு போட்டோகிராபி மிகவும் பிடிக்கும். இவர் தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மகனின் புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ இந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Hemalatha Madathil (@hema2u)

Begam