அட இவர்தான் நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவா?… எவ்ளோ அழகா இருக்காங்க!… பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ….

By Begam

Published on:

நடிகர் கௌதம் கார்த்திக் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் கௌதம் கார்த்திக் இவர் பிரபல தமிழ் நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மகன் ஆவார். மேலும் மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். வாரிசு நடிகராக களம் இறங்கிய நடிகர் கார்த்திக் தனது திறமையை கொண்டு திரையுலகில் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்தார். இப்படத்தில் ஒரு மீனவனாக தோன்றி மக்கள் மனதில் குடியேறினார். இதை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இவர் தன்னோடு ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மஞ்சிமா மோகன் காதலித்தார். இருவரும் தங்களது காதலை வீட்டாரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 28ஆம் தேதி இவர்கள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. நடிகர் கௌதம் கார்த்திக் அப்பா நவரச நாயகன் கார்த்திக்கிற்கு இரண்டு மனைவிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அவர் தனது இரண்டு சகோதரர்களின் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் கவுத்தம் கார்த்திக் அவரது திருமணத்தின் போது தனது அம்மாவுடன் மணமேடைக்கு வரும் பொழுது எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ‘கௌதம் கார்த்திக்கின் அம்மாவா இது? எவ்வளவு அழகா இருக்காங்க’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த பதிவு…..