அட.. பிக் பாஸ் சுருதியா இவர்?…. ஆள் அடையாளமே தெரியலையே… என்னது ஹீரோயின் வேற ஆயிட்டாங்களா…

By Begam

Published on:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான சுருதி பெரியசாமி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சுருதி பெரியசாமி. இவர்  இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் தனது செயல்கள் மூலம் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்தார்.

   

இவர் ஒரு சேலத்தை சேர்ந்த மாடல் அழகி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தையை பற்றி கூறி ரசிகர்களின் அனுதாபத்தை தேடிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு அவரது ரசிகர்கள் ஆர்மியே சமூகவலைத்தளங்களில் அமைத்து விட்டனர்.

மேலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்தும் வருகிறார். தற்பொழுது இவருக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. நடிகரும் இயக்குனருமான சசிகுமார் உடன் இணைந்து ‘நந்தன்’ திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார் சுருதி பெரியசாமி.

தற்பொழுது இத்திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதில் சுருதி பெரியசாமி பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வித்தியாசமாக காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்…