ஐயோ… என்னடி இது… சுதந்திர தின விழாவையா கிளப் டான்ஸா மாத்துவீங்க?… ‘ராணு பாம்பாயகி ராணு’ பாட்டுக்கு APFDC அதிகாரிகளின் அல்டிமேட் கூத்து… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

By Swetha on ஆவணி 16, 2026

Spread the love

சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றப்பட்ட பிறகு, ஆந்திரப் பிரதேச வன மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் செய்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் சிந்தபள்ளி பகுதியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக ‘ராணு பாம்பாயகி ராணு’ போன்ற திரைப்பட மற்றும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு அதிகாரிகள் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில், அதன் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் சினிமா பாடல்களுக்கு நடனமாடியது அங்கிருந்தவர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் மிக முக்கிய தேசபக்தி விழாவில், அரசு பொறுப்பில் உள்ள அதிகாரிகளே இத்தகைய பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

   

இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களும் காட்சிகளும் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் APFDC அதிகாரிகளின் இந்த நடத்தைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தேசியக் கொடியின் கண்ணியத்தையும் சுதந்திர தினத்தின் புனிதத்தையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.