பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

By Gayathri on ஐப்பசி 25, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்பி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த புஷ்பக் கிருஷ்ணா பண்டார்கர் என்பவர், பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் அவரிடம் அறையைக் காலி செய்யும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், புஷ்பக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதற்கிடையில், அந்த அறைக்கு புஷ்பக் சில நாட்களாக வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள், அச்சிடும் இயந்திரம் மற்றும் காகிதங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய சோதனையில், இருபுறமும் அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.37 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளும், முழுமையாக அச்சிடப்படாத நோட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.

   

முழுமையாக அச்சிடப்பட்ட நோட்டுகள் மற்றும் பாதியளவு அச்சிடப்பட்ட நோட்டுகள் உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.85 லட்சம் என மற்றொரு செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புஷ்பக் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் மும்பையில் இருக்கலாம் எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட நோட்டுகள் உண்மையில் கள்ளநோட்டுகளா, அவை புழக்கத்தில் விடப்பட்டனவா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது