அதிர்ச்சியில் கமல்…! ம.நீ.ம கட்சியில் இருந்து விலகி கூண்டோடு வீ தி லீடர்ஸ் அமைப்பில் ஐக்கியமான நிர்வாகிகள்…. அரசியல் களத்தில் பரபரப்பு…!!

By Devi Ramu on ஆடி 15, 2026

Spread the love

உலகநாயகன் கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்தது. மாறாக, ஆளுங்கட்சியான திமுகவின் ஆதரவைப் பெற்று, அக்கட்சியின் தலைவர் கமல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் (ராஜ்யசபா எம்.பி.) பதவியைக் கைப்பற்றினார். கட்சியின் இந்த அரசியல் நகர்வால் கடும் அதிருப்தியடைந்த அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர், தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி வெளியேறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ம.நீ.ம. அமைப்பின் தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த பாலமுருகன் மற்றும் பகுதிச் செயலாளர்களான சுரேஷ், முகிலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்களின் பதவிகளைத் துறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அண்ணாமலை அண்மையில் தொடங்கிய ‘வீ தி லீடர்ஸ்’ என்ற புதிய அமைப்பின் முக்கியப் பிரமுகரான கரு நாகராஜனை நேரில் சந்தித்து தங்களை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டனர். தென் சென்னை பகுதியில் ம.நீ.ம. கட்சிக்குத் தூண்களாக விளங்கிய நிர்வாகிகள் திடீரென விலகி மாற்று அமைப்பில் இணைந்துள்ள இச்சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.