பாஜகவிலிருந்து அடுத்தடுத்து விலகல்… அண்ணாமலையுடன் இணையும் புள்ளிகள்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 6, 2026

Spread the love

தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரு.நாகராஜன், வசந்தராஜன் மற்றும் தருமபுரி மாவட்ட நிர்வாகி ரவி ஆகியோர் கட்சியை விட்டு விலகியிருந்தனர். இந்த வரிசையில் தற்போது பாஜக மகளிர் அணி மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசனும் தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய இந்த நிர்வாகிகள் அனைவரும், அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருவது தற்போதைய தமிழக பாஜக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.