பாபநாசம் பட பாணியில் மனைவி, மாமியாரை கொன்று புதைத்த நபர்.. காட்டி கொடுத்த வாழைமரம்… திகிலூட்டும் பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஆடி 31, 2025

Spread the love

ஒடிசா மாநிலத்தில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து உடல்களை தோட்டத்தில் புதைத்து அதன் மீது வாழை மரங்களை நட்டு தடயங்களை மறைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் ஆரம்பகட்ட விசாரணையில் கணவன் மற்றும் மனைவி இடையே பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. 23 வயதான சோனாலி தளால் தன்னுடைய கணவர் தேபாஷிஷ் பத்ராவின் வீட்டிற்கு தாய் சுமதி தலால் கடந்த ஜூலை 12ஆம் தேதி சமரசம் செய்யும் முயற்சியில் அழைத்து வந்துள்ளார். கடந்த ஜூலை 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை உச்சகட்டத்தை எட்டிய நிலையில் பத்ரா தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மாமியாரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

இரவு நேரம் இருட்டாக மழை பெய்து கொண்டிருந்ததால் பத்ரா இருவரின் உடல்களையும் தன்னுடைய வீட்டின் பின்னால் இருந்த எலுமிச்சை தோட்டத்திற்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளார். பிறகு சந்தேகம் வராமல் இருக்க அந்த இடத்தில் வாழை மரங்களையும் நட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து பத்ரா தனது மனைவி மற்றும் மாமியார் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதேசமயம் மாமியார் வீட்டினரிடம் இருவரும் இரவோடு இரவாக புறப்பட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

   

இதனைத் தொடர்ந்து பத்ரா எந்தவித சந்தேகமும் இல்லாமல் மகிழ்ச்சியாக சுற்றித் தெரிந்த நிலையில் கிராம மக்கள் சந்தேகமடைந்து அவரது எலுமிச்சை தோட்டத்தில் மண் தளர்ந்து காணப்படுவதையும் புதிய வாழை மரங்கள் இருப்பதையும் கவனித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து போலீசார் பத்ராவை விசாரித்த போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு போலீசாரை அழைத்துச் சென்றார். தோட்டத்தில் அழகிய நிலையில் காணப்பட்ட உடல்களை போலீசார் மீட்டு பிரயோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.