2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்காக ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டுத் தொலைக்காட்சியின் முன்னால் கூடினர். போட்டி தொடங்குவதற்கு முன்பு டிவி-யை ஆன் செய்தபோது, அதில் எதிர்பாராத விதமாக ஆபாச இணையதள பக்கங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது (Bookmark) திரையில் தோன்றியது. இதைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து, பின்னர் சிரிக்கத் தொடங்கினர்.
அந்த ஆபாசப் பக்கங்களைச் சேமித்து வைத்தது வீட்டில் உள்ள வயதான தாத்தாதான் என்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதனால் அந்த முதியவர் மிகுந்த அவமானத்திற்கும் சங்கடத்திற்கும் உள்ளானார். அங்கிருந்த இளம் பெண் ஒருவர் டிவியில் தெரிந்த ஆபாச வார்த்தைகளை சத்தமாக வாசிக்க, அதை வீடியோ எடுத்தபடியே மற்ற குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தனர். இதனால் கோபமடைந்த தாத்தா, சத்தம் போடாமல் வாயை மூடும்படி அந்தப் பெண்ணை நோக்கி சத்தமிட்டார்.
இந்த வேடிக்கையான மற்றும் தர்மசங்கடமான தருணத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் சிரிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர். “அன்று அந்த குடும்பத்தினர் பார்த்த உலகக் கோப்பை போட்டியை விட, இந்த சம்பவம்தான் அவர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சுவாரசியமான நிகழ்வாக மாறியிருக்கும்” எனப் பலரும் கிண்டலாகக் கூறி வருகின்றனர்.
