“நீங்க நடிகையா இல்ல பாலியல் தொழிலாளியா?”… பிரபல நடிகை சைத்ராவிற்கு வந்த ஆபாச மெசேஜ்.. ஸ்கிரீன்ஷாட் எடுத்து கிழித்து தொங்கவிட்ட ‘3BHK’ நடிகை…!!

By Muthu Mani on வைகாசி 18, 2026

Spread the love

கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகையும் பாடகியுமான சைத்ரா ஆச்சார், இன்ஸ்டாகிராமில் தனக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய நபருக்குத் துணிச்சலுடன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான ‘3 பிஎச்கே’ திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்ற இவர், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். சமீபத்தில், மகேஷ் ஒசமணி என்ற இன்ஸ்டாகிராம் பயனர் சைத்ராவுக்கு அனுப்பிய செய்தியில், “நீங்கள் ஹீரோயினா அல்லது பாலியல் தொழிலாளியா?” என்று கண்ணியக்குறைவாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சைத்ரா, அந்த நபரின் சுயவிவரப் பக்கத்தை (Profile) ஆராய்ந்தபோது, அவர் போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே தனக்கு எதிராக இத்தகைய ஆபாசக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்று நினைத்து அதிர்ச்சியடைந்த சைத்ரா ஆச்சார், சற்றும் யோசிக்காமல் அந்த ஆபாசச் செய்திகளைத் தனது செல்போனில் ஸ்கிரீன்ஷாட் (Screenshot) எடுத்தார். பின்னர் அதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, பெங்களூர் காவல்துறையை அதிகாரப்பூர்வமாக டேக் (Tag) செய்து புகாரளித்தார். அதில், “மரியாதைக்குரிய பெங்களூர் போலீஸ் துறையே.. உங்களின் துறையை சேர்ந்ததாக காணப்படும் இந்த மகேஷ் ஒசமணியின் கேள்விக்கு தயவு செய்து பதில் சொல்ல முடியுமா?” என்று பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.

   

நடிகையின் இந்த அதிரடிப் புகாரால் பதறிப்போன அந்த நபர், உடனடியாகத் தான் வெளியிட்ட பதிவுகளை அழித்ததோடு, சைத்ராவிடம் கன்னட மொழியில் குறுஞ்செய்தி அனுப்பி மன்னிப்புக் கேட்டுள்ளார். தான் சைத்ராவின் தீவிர ரசிகன் என்றும், தெரியாமல் இந்த கருத்தைப் பதிவிட்டுவிட்டதாகவும் கூறி, தனக்கு எதிராக வெளியிடப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து அகற்றுமாறு கெஞ்சியுள்ளார். இச்சம்பவம் குறித்து பெங்களூர் போலீசாரிடம் கேட்டபோது, ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபர் போலீஸ் துறையைச் சேர்ந்தவர் இல்லை என்றும், அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதால் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இருந்து புகார் அளித்து அடுத்தகட்ட நடவடிக்கை கோரினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.