2வது முறையாக சிறுமி கர்ப்பம்.. கருகலைக்க சென்ற இடத்தில் சிக்கிய ‘ஆபாச’ பிரபலம்.. மருத்துவமனையில் பரபரப்பு..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தைச் சேர்ந்த மதுமிதா, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆபாச ரீல்ஸ் பதிவிட்டு வந்தவர். கடந்த பிப்ரவரி மாதம், பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகளிடம் கஞ்சா போதையில் வம்பு செய்த இளைஞர்களுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிகளையும், அங்கு வந்த காவல்துறையினரையும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால், பொதுமக்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட, காவல்துறையினரை அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக மதுமிதா முதன்முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் கனகம்மாசத்திரத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய கயல்விழியன் போக்சோ வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் அந்தச் சிறுமியை மீண்டும் அவர் கர்ப்பமாகியுள்ளார். எனவே அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் தாயாருடன் மதுமிதாவும் சென்றுள்ளார்; அப்போது அங்கிருந்த மருத்துவர் மதுமிதாவின் குற்றப் பின்னணி குறித்து சிறுமியின் தாயிடம் விசாரித்ததால் ஆத்திரமடைந்த மதுமிதா, ஸ்கேன் சென்டருக்குள் புகுந்து அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அராஜகம் செய்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுமிதாவை மீண்டும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 4 வழக்குகளில் சிறை சென்று வந்த இவர், சமீபத்தில் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு “ஒருத்தனையும் விடமாட்டேன்” என ரீல்ஸ் வெளியிட்டதும் அம்பலமாகியுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் மதுமிதா மீது குண்டர் சட்டம் பாயுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சிறுமி மீண்டும் கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

4 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

4 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

5 மணத்தியாலங்கள் ago