எடை குறைப்பு முதல் மொத்த பிரச்சனைக்கும் ஒரே தீர்வு… தினமும் காலை சோம்பு நீர் மட்டும் குடிங்க போதும்…!

By Srimathi on ஆவணி 6, 2025

Spread the love

சோம்பு அதன் தனித்துவமான சுவை மட்டுமல்லாமல் பல மருத்துவ குணம் வாய்ந்தது. சோம்பு நீர் அருந்தி வந்தால் செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல உடல்நலக் குறையை தீர்க்க உதவுகிறது.

1.சோம்பு செரிமானத்தை மேம்படுத்தி, வீக்கம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.

   

2.சோம்பு நீர் அருந்தி வந்தால் இரைப்பை குடல் அமைப்பின் மென்மையான தசைகளை தளர்த்தி, வீக்கம், வயிற்று வலியை குறைக்க உதவுகிறது.

   

3.காலை நேரத்தில் உணவுக்குப் பின் சோம்பு  நீர் அருந்தி வந்தால் வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடை குறைக்க உதவுகிறது.

 

4.சோம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள்  சிறுநீர் கழிப்பதை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி, உடலை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

5.சோம்பு நீரில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறித்து, மேலும் அதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோயிலிருந்து காக்கிறது.

6.சோம்பில் உள்ள வைட்டமின் சி, உடலில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடி எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

7.சோம்பு நீரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி சருமத்தில்  உள்ள  சுருக்கங்களில் இருந்து காக்கிறது.

8.சோம்பு நீரில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை குறைத்து ,மேலும் நார்ச்சத்து, கொழுப்பின் அளவை குறைத்து, இதய நோயிலிருந்து காக்கிறது.

9.தினமும் சோம்பு நீர் அருந்துவதால் இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

10.சோம்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் வளர்ச்சி, தொண்டைப்புண், இருமல் ,சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

11.சோம்பு நீரில் உள்ள வைட்டமின் ஏ , பார்வையை மேம்படுத்தவும், கண் பிரச்சனைகள் இருந்து தவிர்க்கவும் உதவுகிறது.

12.சோம்பு நீரில் உள்ள ஈஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் வலி மற்றும்  பிடிப்புகளைக் குறைக்க உதவுகிறது.

இத்தகைய நற்பலன்களை கொடுக்கும் சோம்பு, “பெருஞ்சீரகம்” என்றும் அழைக்கலாம்.