இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும் ஒரு சிறிய தோல்வியை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற முடிவை நாடுகின்றனர். அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களையும் மிகவும் மன அழுத்தத்தில் ஆழ்த்தி விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் நகர் பகுதியில் நரசிங் கல்லூரி மாணவர் சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 20 வயதான சுரேஷ் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்தவர். மெரிட் அடிப்படையில் சீட்டு பெற்று தனியார் கல்லூரியில் நரசிங் படித்து வந்துள்ளார்.
ஜெய நகர் சரஸ்வதிபுரத்தில் தனியாக வாடகை அறையில் தங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய whatsapp ஸ்டேட்டஸில், “Good Bye My Dear Life Rip” என்று பதிவிட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. உடனே அவருடைய தந்தை மகன் இருக்கும் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சுரேஷ் உயிரிழந்த நிலையில் கடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கல்லூரியில் இருந்த தன்னைவிட வயது மூத்த மாணவியை காதலித்தால் என்ற நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சமூக அழுத்தம் மற்றும் மனநல பாதிப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
