மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேதார் குர்ஜார் என்ற இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர் அதிகாரி ரச்சனா சோனி என்பவர் திடீரென ஆத்திரமடைந்து, அந்த வாலிபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
“नर्सिंग ऑफिसर बोलीं: 100 आदमी बुलाकर पिटवा दूंगी…ऐरा-गैरा समझा है क्या…”लोकल ही बैठे है यहां पर”…!
बुखार से पीड़ित युवक भर्ती होने हॉस्पिटल आया था..बोला मैं इलाज करवा कर ही जाऊंगा..इतने में नर्सिंग ऑफिसर रचना सोनी भड़क गई..!
इलाज कराने आए केदार गुर्जर को 100 आदमियों से… pic.twitter.com/6WlSpjGyno
— Rahul Saini (@JtrahulSaini) April 20, 2026
இந்த மோதலின் போது, “என்னை சாதாரண ஆள் என நினைத்தாயா? நான் உள்ளூர் ஆள் தான். 100 பேரை வரவழைத்து உன்னை அடி வெளுக்கச் செய்வேன்” என அந்த வாலிபரை செவிலியர் அதிகாரி மிரட்டியுள்ளார். சிகிச்சைக்காக வந்த நோயாளியிடம் மனிதாபிமானமின்றி, அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்த செவிலியரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி ரவுடித்தனமாகப் பேசுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
