உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லாஜபத் ராய் மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகச் செவிலியராகப் பணியாற்றி வந்தவர் அஞ்சலி சர்மா (25). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் பணியாற்றி வந்த அதே மருத்துவக் கல்லூரியில் வார்டு உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சுஃபியான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்தி, சுஃபியான் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறும், அதற்கு முன்னதாக மதம் மாறுமாறும் அஞ்சலியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு அஞ்சலி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று பணிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுப் புறப்பட்ட அஞ்சலி, லோஹியாநகர் பகுதியில் உள்ள சுஃபியானின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஃபியான், அவரது சகோதரி சாஜிதாவுடன் இணைந்து துப்பட்டாவால் அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர், இக்கொலையை மறைப்பதற்காக, சாஜிதா ஒரு ஈ-ரிக்ஷாவை வரவழைத்து அஞ்சலிக்கு உடல்நிலை சரியில்லை என ஓட்டுநரிடம் கூறி, அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அஞ்சலியின் சடலத்தை மருத்துவக் கல்லூரியின் அவசரச் சிகிச்சைப் பிரிவின் வெளிப்பகுதியில் வீசிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர். அங்குள்ள ஊழியர்கள் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சாஜிதா மற்றும் சுஃபியானின் குற்றத்தை உறுதிப்படுத்தினர். தற்போது காவல்துறையினர் சாஜிதாவை மற்றும் அவர்களது தாயாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தப்பியோடிய முக்கியக் குற்றவாளியான சுஃபியானைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சரத்குமார் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்…
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…