கொஞ்சம் மிஸ் ஆனா அவ்ளோதான்… தனது உயிரை பணயம் வைத்து… வடிகாலில் குதித்து செல்லும் செவிலியர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் செவிலியர் ஒருவர் பணிக்கு செல்வதற்கு வெள்ளத்தில் மூழ்கிய வடிகாலில் குதித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மண்டி மாவட்டத்தின் சகார்காட்டியில் உள்ளது. இங்குள்ள பகுதியில் பெய்த கனமழையால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது .அந்த பகுதி ஆறு அடி பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மக்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து ஆறு மற்றும் வடிகால்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதுவ .  இந்த நிலையில் தான் கமலா என்ற செவிலியர் தன்னுடைய பணிக்குச் செல்ல வேண்டி இருந்த சூழலில் வடிகால் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அவர் அந்த வடிகாலில் குதித்து கடந்துள்ளார்.

   

அதை ஒருவர் வீடியோவாக எடுத்தார்.  செவிலியர் கமலா  சமூக சுகாதார மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் நடைபாதை பாலங்கள் இடிந்து தினமும் பணிக்கு செல்வது கடினமாகி வருகிறது. நான்கு கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டி உள்ளது. ஆனால் தன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல் நிரம்பி வழியும் வடிகாலை கடந்து சென்ற பிறகுதான் அவர் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடிகிறது.