கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள சங்கர் மருத்துவமனை அருகே பிரபலமான கிறிஸ்தவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மடத்தில் உள்ள தேவாலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கன்னியாஸ்திரியின் சடலம் ஒன்று மீட்டெடுக்கப்பட்டது. அவருடைய சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்கொலை செய்து கொண்ட கன்னியாஸ்திரி மதுரையை சேர்ந்த மேரி ஸ்கலாஷ்டிகா(33) என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த மூன்று வருடங்களாக தேவாலயத்தில் சேவையாற்றி வந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவாலயத்தில் கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…