தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் இடம் பிடிக்கும் என இபிஎஸ் ஓடிக்கொண்டிருக்கின்றார்.
இதனிடையே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என்று பாஜக கூறிக் கொண்டிருக்க அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை குறி வைத்துள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. வெற்றி பெற வாய்ப்புள்ள 35 தொகுதிகளை பாஜக தேர்வு செய்துள்ளது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் தமிழகம் வரும் பி. எல். சந்தோஷ் இது பற்றி இபிஎஸ் இடம் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
