சீமானுக்கு ஷாக் கொடுத்த ஸ்டாலின்… திமுகவில் இணைந்த முக்கிய பெண் நிர்வாகி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கி தீவிரமாக தேர்தல் பணியில் செயலாற்றி வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுகவுக்கு போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய் அரசியலில் இறங்கிய பிறகு மாற்றுக் கட்சியினர் பலரும் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் திமுகவும் தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைத்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் திமுகவில் இணைந்துள்ளார். புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் நெட்டப்பாக்கம் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கௌரி என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர். சிவா முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.