“கோவை சிறையில் அடைக்கக் காரணம் இதுதான்”…. வெளியே வந்ததும் நாம் தமிழர் கார்த்திகா போட்ட பகீர் போடு…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 23, 2026

Spread the love

தாராபுரத்தில் இடைத்தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சரின் வாகன அணிவகுப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமினில் வெளியே வந்த கார்த்திகாவிற்கு, சிறை வாசலில் நாம் தமிழர் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திகா, வ.உ.சிதம்பரனார், சீமான் மற்றும் மணியரசன் போன்ற வரலாற்று சிறப்புமிக்க தலைவர்கள் அடைக்கப்பட்ட கோவை சிறையில் தன்னையும் அடைத்தமைக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். தன் மீதான வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கை குறித்து பேசிய அவர், இறுதி நாளில் மற்ற வேட்பாளர்களின் பரப்புரையை முடக்கி, முதலமைச்சர் மட்டும் பரப்புரை செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கேள்வி எழுப்பினார்.

   

தான் ஊழல் குற்றவாளியோ அல்லது போதைப்பொருள் வழக்கில் சிக்கியவரோ கிடையாது என்றும், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடும் களப்போராளி தான் என்றும் கார்த்திகா திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களின் வாக்கு கேட்கும் அடிப்படை உரிமையை அரசு மறுப்பதாகவும், இது கடுமையான ஜனநாயக மீறல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

   

பேட்டியின் போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்த கார்த்திகா, சில விமர்சனங்கள் குறித்த கேள்விகளைத் தவிர்த்தார். இறுதியாக, தாங்கள் சிறையில் இருந்து இப்போதுதான் வெளிவந்துள்ளோம் என்பதால், அது தொடர்பான கேள்விகளை மட்டும் கேட்குமாறு அருகில் இருந்த அவரது கணவர் செய்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.