Categories: சினிமா

சிவாஜியிடம் தனது சொந்த வீட்டை விற்ற என் எஸ் கிருஷ்ணன்… கடைசியில அவருக்கே இப்படி ஒரு நிலைமையா..?

Spread the love

‘இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என கொண்டாடப்படுபவர் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன். நகைச்சுவை என்றால் அந்த நொடி மட்டும் சிரித்து விட்டு கடந்து போகும் ஒரு விஷயம் அல்ல அதன் மூலம் மக்களை சீர்படுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு தூண்டுகோல் என்பதை முயற்சி செய்து வெற்றியும் கண்டவர்.தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் என பன்முகத் திறமைகளை கொண்ட சகலகலா வல்லவராக திரையுலகில் வலம் வந்தவர்.

தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தர்மம் செய்தே வாழ்ந்து பழகிய இந்த வள்ளல் தான் இறக்கும் தருவாயில் கூட தன்னிடம் இருந்த வெள்ளி கூஜாவையும் ஏழை தொழிலாளியின் திருமணத்திற்காக கொடுத்து பிறகு தான் தனது கடைசி மூச்சை விட்டார். எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் கூட கலைவாணரிடம் இருந்து இந்த வள்ளல் தன்மையை வளர்த்து கொண்டார்கள் என்பதை அவர்களே பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள்.

இப்படி மற்றவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தே ஏழையாகி போன இவர் கடைசியில் கடன் சுமையால் தன் சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக  முடிவும் செய்தார். ஆனால் மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிக விலைக்கு அந்த வீட்டை வாங்கி கொள்வதாக கூறவும், கிருஷ்ணன் அவர்களுக்கு பணத்தேவை  அதிகம் இருப்பதால் மார்வாடி இடமே வீட்டை விற்று விட  அவரது நண்பர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

ஆனால் என் எஸ் கிருஷ்ணன் ‘நான் பல வருடங்கள் வசித்த வீடு இது.. இந்த வீட்டை ஒரு மார்வாடியிடம் கொடுத்து விட்டோமே என இந்த பக்கம் வரும்போது நான் நினைத்து கஷ்டப்படக்கூடாது.  ஆனால் சிவாஜிக்கு விற்றால் ‘ நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன் இருக்கான்னு மனசு சந்தோசப்படும்’ என கூறி கடைசியில் தனது சொந்த வீட்டை சிவாஜிக்கே கொடுத்து விற்று விட்டாராம்.

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

17 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

25 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

33 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

40 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

48 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

50 minutes ago