வீட்டுக்கு திருட வந்த திருடன்.. N.S கிருஷ்ணன் செய்த நெகிழ வைக்கும் செயல்.. மனுஷன் அங்க ஒசந்துட்டாரு..!

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் தான் என்.எஸ் கிருஷ்ணன். நாடகத்தில் நடிக்க தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நுழைந்தவர். குறிப்பாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் காமெடி செய்யும் திறமை கொண்டவர். எம்ஜிஆருக்கு குரு போல எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். எம்ஜிஆருக்கு தகுந்த நேரத்தில் நல்ல அறிவுரைகளை கூறி அவரை வழி நடத்தியவர். அதன் காரணமாக என் எஸ் கிருஷ்ணன் மீது எம்ஜிஆர்க்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கடைசி வரை இருந்தது. பல திரைப்படங்களில் மக்களுக்கு தேவையான அறிவுரையை காமெடி மூலமாக சொல்லி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் என் எஸ் கிருஷ்ணன்.

அது மட்டுமல்லாமல் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை பிறருக்கு கொடுத்து விடும் குணம் கொண்டவர். கஷ்டம் என வந்து யார் இவரிடம் உதவி கேட்டாலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விடும் வள்ளலாக இருந்தார். இவரிடமிருந்து தான் பிறருக்கு உதவும் குணத்தை எம்.ஜி.ஆர் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இப்படியான நிலையில் என் எஸ் கிருஷ்ணன் வீட்டுக்கு நள்ளிரவில் ஒரு திருடன் திருட வந்தான். அவனை கையும் களவுமாக பிடித்த வீட்டு காவலாளிகள் என் எஸ் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அப்போது எதற்காக நீ திருட வந்தாய் என்று கேட்க, பணம் இல்லாமல் பசி பட்டினியில் என் குடும்பம் அங்கு வாடிக் கொண்டிருக்கிறது அதற்காகத்தான் நான் திருட வந்தேன் என்று அந்த திருடன் சொன்னான். உடனே மனம் கலங்கிய என் எஸ் கிருஷ்ணன் உனக்கு என்ன வேலை தெரியும் என்று கேட்க திருடன் எனக்கு நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருந்தாலும் நன்றாக ஓட்ட தெரியும் என்று கூறியுள்ளான். உடனே கார் சாவியை அவனிடம் கொடுத்து இனிமேல் நீதான் எனக்கு டிரைவர் என்று என்ன கிருஷ்ணன் கூறி அவனுக்கு வேலை கொடுத்தார். கடைசியில் பல வருடங்களாக தன்னிடம் பணியாற்றிய அந்த டிரைவருக்கு அதே காரை பரிசாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

7 மணத்தியாலங்கள் ago