தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் தான் என்.எஸ் கிருஷ்ணன். நாடகத்தில் நடிக்க தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நுழைந்தவர். குறிப்பாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் காமெடி செய்யும் திறமை கொண்டவர். எம்ஜிஆருக்கு குரு போல எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். எம்ஜிஆருக்கு தகுந்த நேரத்தில் நல்ல அறிவுரைகளை கூறி அவரை வழி நடத்தியவர். அதன் காரணமாக என் எஸ் கிருஷ்ணன் மீது எம்ஜிஆர்க்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கடைசி வரை இருந்தது. பல திரைப்படங்களில் மக்களுக்கு தேவையான அறிவுரையை காமெடி மூலமாக சொல்லி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் என் எஸ் கிருஷ்ணன்.

அது மட்டுமல்லாமல் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை பிறருக்கு கொடுத்து விடும் குணம் கொண்டவர். கஷ்டம் என வந்து யார் இவரிடம் உதவி கேட்டாலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விடும் வள்ளலாக இருந்தார். இவரிடமிருந்து தான் பிறருக்கு உதவும் குணத்தை எம்.ஜி.ஆர் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் என் எஸ் கிருஷ்ணன் வீட்டுக்கு நள்ளிரவில் ஒரு திருடன் திருட வந்தான். அவனை கையும் களவுமாக பிடித்த வீட்டு காவலாளிகள் என் எஸ் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
/indian-express-tamil/media/media_files/2XaLyGgbmYTiATljHlQ7.jpg)
அப்போது எதற்காக நீ திருட வந்தாய் என்று கேட்க, பணம் இல்லாமல் பசி பட்டினியில் என் குடும்பம் அங்கு வாடிக் கொண்டிருக்கிறது அதற்காகத்தான் நான் திருட வந்தேன் என்று அந்த திருடன் சொன்னான். உடனே மனம் கலங்கிய என் எஸ் கிருஷ்ணன் உனக்கு என்ன வேலை தெரியும் என்று கேட்க திருடன் எனக்கு நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருந்தாலும் நன்றாக ஓட்ட தெரியும் என்று கூறியுள்ளான். உடனே கார் சாவியை அவனிடம் கொடுத்து இனிமேல் நீதான் எனக்கு டிரைவர் என்று என்ன கிருஷ்ணன் கூறி அவனுக்கு வேலை கொடுத்தார். கடைசியில் பல வருடங்களாக தன்னிடம் பணியாற்றிய அந்த டிரைவருக்கு அதே காரை பரிசாகவும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
